Monday, January 20, 2014

மூக்குக் கண்ணாடி:
கண்ணாடிப் பேழைக்குள் யார் மலரை வைத்தது...
ஓ... கண்கள்...

அழகு:
ஆணவம் கூட அழகாய்த் தெரிகிறது,
பெண்ணே, உன் கண்களில்!

மலர்:
ஆயுள் அரைநாள், எனினும் - எத்தனைக்
     கண்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினாய்..
சிரித்ததுக் கொண்டே பிறந்தாய்,
     உலகைக் காணும் உவகையில்…
அழுதுகொண்டு பிறந்த மனிதனைக்
     காண சகிக்காமல் வாடி விழுந்தாயோ...

விடியல்:

அன்னைக்கு அதிகாலை,
மகளுக்கு முன்பகல்,
மகனுக்கு நண்பகல்,
செல்லநாய்க்கு அந்திமாலை...
தூக்கத்திலும் விழித்திருக்கும் தந்தைக்கோ,
அது வெறும் பகற்கனவு!!!

மயில்...
யார் அழைத்தப் போதும் வரவில்லை,
நீ தோகை விரித்தாடும் அழகைக் காணமட்டும்,
மயங்கி வருகுதோ மழை!!!


அருவி:
பாறையின் கர்வத்தைச் சிதறடித்தாய்
சாரல் கரம் நீட்டி ஆறுதல் சொன்னாய்
கூழாங்கல்லாக்கி விழுங்கி நின்றாய்
சில சீவனை இடையே வாழவைத்தாய்
உதவாக் கல் இன்று உயிர் காக்குதே - இனி
அமைதியைத் தேடி உன் கடற்பயணமே


Mostly Dangerous:
This mostly dangerous person can,
Double your depression, exaggerate your happiness,,,
Manipulate all your emotions!
The Most dangerous person in earth you should stop speaking with...

Its You!!!


தற்கொலை:
தற்கொலை செய்து கொண்டவனுக்கு ஒரு பிறப்பு - அதைத்
தள்ளி வைத்தவனுக்கோ தினம் புது பிறப்பு

பொங்கல் :
பச்சரிசிப் பால் பொங்கல் பொங்கியதே மகிழ்ச்சியுடன்.... 
சாற்றி வைத்தச் செங்கரும்பும் சுவைத்ததுவே இன்பத்துடன்.... 
உழுதவன் உள்ளமெல்லாம் ஒளிர்ந்ததே கதிரவன் போல்...
நம்பிக்கை
  உரக்கச் சொல்வோம் பொங்கலோ பொங்கல் ...!!!

அமைதி:
பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்தால்
அமைதியாக இருக்கும் போது
நிம்மதியாக இருக்க முடியாது!!

பார்வை:
சித்திர வண்ணப் பெண்ணே,
     அஸ்திரம் எய்தாயோ,,,
நாலு பாகமாய் துடித்த இதயம்,
     நூறு பாகமாய் வெடித்ததடி.....


காதல்:
உன் சுயனலத்தில் இன்னொருவரைச்
சேர்த்துக் கொண்டால், அதுவே காதல்...


மனம்:
மனம்தான் எத்தனை வேகம் கொண்டது.
பழைய காதலியைப் பார்க்கும் போது சிறு புன்முறுவல் வரும்.
அதற்கு சிறு மில்லி-seconduகளே ஆகும்.

அந்த இடைவேளையில் சில ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்களில் காட்டிவிடும் இந்த மனம்.


காதல் சொல்லப் போறாய்..
உதடுகள் சொல்லுமுன்
     கண்கள் சொல்லிவிட்டிருக்கும், உன் காதலை!
அவர் விலகிச் செல்வதும் காதலில் விழுவதும்
     உதடுகள் சொல்லும் விதத்தில் மட்துமே உள்ளது


நிலா:
சந்திரன் என்பார் உன்னை நிலா என்பார்
நீ ஆணா பெண்ணா என்று அறியாது நின்றேன்..
பூமிப் பெண்ணைச் சுற்றி வருவதால் ஆணாயிருக்கலாம்
ஆதவனுக்காய் ஏங்கித் தேய்வதால் பெண்ணாயிருக்கலாம்!!
கடுவன் முகமாதலால் ஆணாயிருக்க வேண்டும்
குளிர்க்கரம் நீட்டி அணைப்பதால் பெண்ணணாயிருக்க வேண்டும்!!
இன்று விளங்கியது, நிச்சயம் நீ பெண்தானடி,

உன் இரட்டையளைக் கண்டுவிட்டேன்!

காணல்:
மண் வாசம் தந்து விடாத இன்பத்தை உன் வாசம் தந்ததடி...
கண்கள் நேரிட்ட குறுநொடியில் உயிரும் வியர்க்குமேன்று அறிந்தேனடி...
காணலும் காண விழைதலும் மட்டுமல்ல,
மௌன மொழிகளும் பேசும் விழிகளும் கூட காதல் சொல்லும்

வலி:
விரும்பித் தான் ஏற்று கொண்டேன்.
உடலில் வந்த போது அழகாக்கிச் சென்றாய்..
உள்ளத்தில் வந்த போது அழவைத்துச் சென்றாய்...


Valentine's Day:
காதலில் விழுந்தவர்களுக்கும்
காதல் கோட்டை கட்டியவர்களுக்கும்
காதலுக்கு மரியாதை கொடுப்பவர்களுக்கும்
காதல் தேசத்தில் வாழ்பவர்களுக்கும்
காதல் சடுகுடு ஆடுபபவர்களுக்கும்
காதல் வைரஸ்-ஆல் தாக்கப் பட்டவர்களுக்கும்
காதல் இருந்தும் காதலிக்க நேரமில்லாதவர்களுக்கும்
காதல் பரத்-களுக்கும்
ஒரு தலை ராகம் பாடுபவர்களுக்கும்

VVS-இன் Valentine’s Days வாழ்த்துக்கள்

வரம்:
கல்வி  - கடவுள் தந்த வரம்.
தாய் -  கடவுளுக்கு நிகரான வரம்.
நண்பன் -  கடவுளுக்கு கூட கிடைக்காத வரம்!

Friends:
U r in a deep dilemma
der s always a person to suggest you..
U r bored to d core
der s always a person who never says no to hangouts..
U r dying out of hunger
der s always a perosn who never says no to eat out wit u..
U r in a deep economic crisis
der s always a person who transfers money within minutes..
U r sad after a break up
der s always a person to hear your cribblings..
U want to elope a girl
der s always a person who stands by you..
U hide certain things from ur parents
der s always a person to reveal them and make you embarrassed..

Certain things are not simply not possible without FRIENDS...
They take ur serious moments for fun and ur funny moments seriously...

மூழ்காத
 ship :
By 2 Tea, Hangover, Month-end, Chotta Recharge, Kisu-Kisu, Sightu, Love Failure, Bike Trip, 1st Day 1st Show, Window Shopping, Weekend Hangouts, Wardrobe sharing....
இதெல்லாம் இருக்கற வரைக்கும் Friendship
 என்றுமே மூழ்காத ship தான்.........


Heaven:
A boy and a girl were in love and they spent time together happily. 
One fine day, they had a controversy and they developed grudge against each other, but they didn't stop loving. Their ego grew and at this time, girl's parents found a boy for her marriage. The couple met and decided to break-up, for they concluded, with ego and grudge they could never live happily. 

Life moved on, boy got settled in his life, so did the girl, and both were happy in their way. They never met each other till death. 
Its time for their after life. They both got in to heaven, had a chance to meet in heaven. The boy said to girl, "We made a right decision to break-up, for we lived happily so that we could reach heaven. Good for us!"


God, who was passing by, heard this, and thought "I gave them a chance to live in heaven while they were alive. The chose to be in heaven only after death and they boast about it!!! Humans are strange..."

IT Culture:
எங்க அப்பா, வயசுல பெரியவங்கள பேர் சொல்லி கூப்டாலே, செருப்பாலாயே அடிப்பாரு... ஆனா Company-ல என்ன விட 20 வயசு பெரியவர பெர் சொல்லி கூப்புட வேண்டியதா இருக்கு... இதுல அவர dude-னு வேற கூப்டனுமாம்.. கொடும கொடும.... 

Who let the dogs out:
காதல்-ன்றது Bangalore-நாய் மாதிரி. 
Bike-ல போனா பின்னாடியே துரத்தும்... 
நடந்து போனா எளக்காரமா பாக்கும்......

Heart:
U know y Love resides always in Heart? Coz, it is the one and oly organ which takes in impurity and gives out purtiy!!!